Skip to main content

பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லோரும் இதை பகிருங்கள் தோழர்களே...!



அப்பான்னு நினைச்சேன்...!

அசிங்கமாய் தொட்டான்.....!

சகோதரன்னு பழகினேன்....!

சங்கடமாய் தொட்டான்........!

மாமான்னு பேசினேன்......!

மட்டமாய் நடந்தான்.....!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்...!

ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்....!

நட்புக்கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!

மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைப்பேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...!

கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்....!

அலறி ஓடுகிறேன்
எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததெனெ
சத்தமாய் கூறுகின்றனர்
பெண்ணை பெண்ணாக
பார்க்காமல் மனிதராய்
பார்ப்பது எக்காலம்?

பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ?

#பாலியல வன்முறைக்கு
எதிராக எல்லோரும் இதை
பகிருங்கள் தோழர்களே...!

அப்படி என்னடா
உங்களுக்கு
அடங்காத வெறி
சிதைத்துவிட்டீர்களே
சிறு பிள்ளையின் குறி...!

பால்மணம் மாறா
பச்சிளங்குழந்தைகளை
பாலியல் வல்லுறவால்
பாழ்படுத்தி கொன்றீர்களே...!

உறுப்பை மட்டுமே
பார்க்கும் உங்கள்
இதயம் இரும்பிலா
செய்தார்கள்...!

அரிப்பெடுத்த
உங்களை நெருப்பிட்டு
அழிக்கவும் வேண்டாமோ...!

சிசு கொலையில்
தப்பித்து உங்கள்
சில்மிஷத்தால்
சாகுதடா எம் குழந்தை...!

பிள்ளை பேறு
பெண்களுக்கு
மறு பிறப்பு
கேட்டுப்பாருங்கள்
உங்கள் தாயிடம்...!

பெற்ற பிள்ளை
சிதைத்து
கொல்லப்பட்டால்
என்னாகும்
போய்ப்பாருங்கள்
இழந்த தாய்நிலை....!

ஹாசினியும் ரித்திகாவும்
இன்னும் இன்னும்
எத்தனையோ
நித்தம் நித்தம்
சாகுதடா....!

வல்லுறவு செய்கின்ற
வல்லூறு உங்களிடம்
காப்பாற்ற பெற்றவரின்
நித்திரையும் போகுதடா....!

இனத்தினைப் பெருக்க
இருக்கும் உறுப்பால்
இனத்துக்கே களங்கம்
விளைப்பதும் ஏனடா....!

போதுமடா போதுமடா
புத்தி கெட்ட மானிடரே
உங்களைப் பெற்றவளும்
வயிறெரிந்து தூற்றுவாளே
இனியேனும் திருந்துங்கள்
இதயத்தால் வருந்துங்கள்....!

🖋எழுத்தாளர் பெயர்
தெரியவில்லை...!!!

பகிரலாம் என
தோன்றியது...!

Comments

Popular posts from this blog

மனைவி ...கணவனிடம் கேட்டாள்....

👱‍♀மனைவி ...கணவனிடம் கேட்டாள்.... நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.? அப்பாவி 👱🏽கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).||||||| ரொம்ப happyயா feel பண்ணுவேன்......😀😀😀😀😀 அப்புறம் என்ன.? திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல.... 😑😑😑 செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல😑😑😑😑😑 புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி😉😉😉😉😉😉😉

சாமி, ரொம்ப பசிக்குது. சோறு வாங்கி குடுங்க...

பிச்சைக்காரன்:     சாமி, ரொம்ப பசிக்குது.  சோறு வாங்கி குடுங்க. இவன்:    கவலைப்படாதே,  உனக்கு சரக்கே வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:     அய்யோ சாமி,  எனக்கு பழக்கம் இல்லீங்க. இவன்:       சரி வா,  சிகரெட் வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:      வேண்டாம் சாமி.   சோறு மட்டும் போதும். இவன்:     சரி வா,   குதிரை ரேஸுக்கு போவோம்.  அப்புறம் சாப்பாடு வாங்கி தாரேன். பிச்சைக்காரன் :      எனக்கு சூதாட்டம் புடிக்காது சாமி. இவன்:      சரி வா,  உனக்கு சாப்பாடே வாங்கி தாரேன்.   அதுக்கு முன்னாலே நீ, என் வீடு வரை வரணும். பிச்சைக்காரன்:       எதுக்கு சாமி. இவன்:     குடி.,  சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் இல்லாம,  இருக்கும் ஒரு மனிதனின் நிலமைய. என் மனைவிக்கு  உன்ன வச்சி உணர்த்தணும்.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்...

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆ...