படித்ததில் சிரித்தது
நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.
"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"
"வாங்கிக்க...!"
"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..."
"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"
“அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”
“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா”
"ஏங்க... அப்புறம் நாம பார்த்தோமே ஒரு கார்... இப்ப ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"
"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்"
"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.
இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.
ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….
"யாரோட மொபைல்ங்க இது..?".

Comments
Post a Comment